பொதுமக்களின் கவனம் ஈர்க்க அரசியல் கட்சிகளின் "நூதன" போராட்டங்கள்!
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் களத்தில் அனல் கிளம்பியுள்ளது. ஒருபக்கம் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்க, எதிர் அணியை குறிவைத்துத் தேர்தல் பிரச்சாரமும் தீவிரமாகத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், மத்திய, மாநில அரசுகளுக்கிடையே மற்றும் ஆளுங்கட்சிக்கு இடையே யுத்தம் இப்போதே தொடங்கியுள்ளது. மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக, அரசியல் கட்சிகள் நூதன முறைகளை பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.
அல்வா வழங்கி போராட்டம்:
கண்டா வரச் சொல்லுங்க:
திமுகவை பொறுத்த வரை, ஏற்கனவே கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சிபிஐ, சிபிஐஎம், விசிக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. கூடுதலாக மக்கள் நீதி மய்யம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்த நிலையில், அதிமுகவும், பாஜகவும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தனித்தனியாக வலுவான கூட்டணியை அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில், அதிமுக சார்பில் கடந்த வாரம் ஒரு போஸ்டர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன. திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் தொகுதி பக்கம் எட்டிபார்க்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி 'கண்டா வரச் சொல்லுங்க' என்று அதிமுகவினர் போஸ்டர் அடித்து தமிழ்நாடு முழுவதும் ஒட்டினர். மேலும், சமூக வலைதளங்களிலும் போஸ்டர்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
இதேபோல் கவனம் ஈர்த்த சில போராட்டங்களை தற்போது பார்ப்போம்:
குண்டும் குழியுமாக காணப்பட்ட சாலை; தாமரை மலரை விட்டு போராட்டம்:
புதுச்சேரியை சேர்ந்தவர் சுத்தம் சுந்தர்ராஜன் என்பவர் சமூக ஆர்வலராக இருக்கும் நிலையில் இவர் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தி அவ்வப்போது சில நூதனமான முறையில் போராட்டங்களை நடத்தி வருகிறார். அவரது போராட்டத்திற்கு அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்தி தீர்த்து வைப்பார்கள்.
இந்நிலையில் கடந்த மாதம் புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் சாலை முழுவதும் குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது. மழையால் சாலையில் உள்ள பள்ளத்தில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். ஒரு சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்பட்டன.
இதனை அரசுக்கு தெரியபடுத்தும் வகையில் கடலூர்- புதுச்சேரி சாலை மரப்பாலம் சந்திப்பில் தனது சட்டை மட்டும் பேண்ட்டுகளை கிழித்துக் கொண்டு சாலையில் உள்ள பள்ளத்தின் அருகே படுத்து கொண்டு இரண்டு தாமரை பூக்களை வைத்து அண்ணே! தாமரை மலர்ந்துருச்சுன்னே! என்று சொல்லி நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்:
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணியை துவக்கி உள்ளது. இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான இடங்களை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டு உள்ளது.
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தொடர்ந்து தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
ரூ.2,000 நோட்டுகளுக்கு பாடை கட்டி, ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்:
நாடுமுழுவதும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக கட்ந்த ஆண்டு ரிசர்வ் வங்கி அறிவித்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இதன் ஒருபகுதியாக திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் துரை மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, 2000 ரூபாய் நோட்டு கட்டுகளுக்கு பாடை கட்டியும், மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்தும் நூதன முறையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
கூடாரம் அமைத்து போராட்டம்:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 4-வது வார்டு கவுன்சிலர் இளங்கோவன், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆர்.வி. நகரில் கழிவுநீர் வடிகால் கட்டி தரக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் அதற்கான நடவ டிக்கைகள் எதுவும் தொடங்காததால் போராட்டம் நடத்த முடிவு செய்தார்.
மேலும் பேரூராட்சி நிர்வா கத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர் நூதன முறையில் தனி ஒருவராக திடீரென்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். பேரூராட்சி அலுவலகத்தின் நுழைவு வாயில் முன் பாக வாடிப்பட்டி பேரூராட்சி நிர்வாகமே, ஆர்.வி.நகர் சாக்கடை நீரை வெளியேற்ற 20 அடி நீள வாய்க்கால் கட்ட ஆறு மாதங்களா, ஏற்கனவே டெங்கு மரணம் உறுத்த வில்லையா, திறமையற்ற நிர்வாகம், போர்க்கால அடிப்படையில் சாக்கடை கட்டு என கோஷங்கள் எழுப்பினார்.
மேலும் கோரிக்கை வாசகம் எழுதப்பட்ட பதாதை வைக்கப்பட்டு அதன் அருகில் துணியால் கூடாரம் அமைத்து தனது போராட்டத்தை தொடங்கினார். தகவலறிந்த செயல் அலுவலர் ஜெயலட்சுமி, கவுன்சிலர் இளங்கோவனுடன் பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் காலக்கெடுப்படி வடிகால் அமைப்பதாக உறுதியளித்ததன் பேரில் காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட் டது. இந்த நூதன போராட் டத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மண் சாலையில் நாற்று நட்டு போராட்டம்:
திருவாரூர் அருகே குடவாசல் காப்பணாமங்கலம் நகர் பகுதியில் மழை நாட்களில் சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாகி விடுவதால் நடந்து செல்ல முடியாததோடு, வாகனங்களிலும் செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். அவசர உதவிக்கு இந்த பகுதி வழியாக 108 ஆம்புலன்ஸ் கூட இயக்க முடியாத சூழலும் உள்ளது. வாடகை வாகனங்களும் சாலை முகப்போடு திரும்பி விடுகின்றனர்.
காய்கறிகளுக்கு இறுதி சடங்கு செய்து போராட்டம்: