Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புதிய ரூ.10, ரூ.500 நோட்டுகள் விரைவில் அறிமுகம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு !

விரைவில் புதிய ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுகள் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
07:35 AM Apr 05, 2025 IST | Web Editor
Advertisement

இந்திய ரிசர்வ் வங்கி, நமது நாட்டுக்கான ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு வருகிறது. சமீபத்தில் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த சக்திகாந்த தாஸ் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து அதன் புதிய கவர்னராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்றார்.

Advertisement

அவர் பதவியேற்ற சில நாட்களில் புதிய கவர்னர் கையெழுத்திட்ட ரூ.50 நோட்டு அறிமுகம் செய்ததுடன், ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

இந்த நிலையில் ரிசர்வ் வங்கி நேற்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்,
"விரைவில் ரூ.10 மற்றும் ரூ.500 நோட்டுகள் புதிதாக அச்சடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என்று கூறி உள்ளது. இந்த புதிய ரூபாய் நோட்டுகளின் வடிவமைப்பு தற்போது வழங்கப்படும் மகாத்மா காந்தி வரிசை தாள்களை போன்று இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

அதேநேரம் ஏற்கனவே புழக்கத்தில் உள்ள பழைய 10 ரூபாய் நோட்டுகள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்றும், மகாத்மா காந்தி உருவ தொடரில் வெளியான புழக்கத்தில் உள்ள ரூ.500 நோட்டுகளும் செல்லுபடியாகும் என்று கூறி உள்ளது. ரிசர்வ் வங்கியின் தற்போதைய ஆளுனர் மல்கோத்ராவின் கையெழுத்துடன் புதிய ரூபாய் நோட்டுகள் வெளியாகும். கடந்த மாதம் புதிய ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் மல்கோத்ரா கையெழுத்துடன் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
AnnouncementBankIndiaintroducedreserve bankRupees
Advertisement
Next Article