’களம் காவல்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் மம்மூட்டி. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான பிரம்மயுகம் திரைப்படம் வசூல் மற்றும் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து மம்மூட்டி களம்காவல் என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ’குரூப்’ படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இயக்கியுள்ளார்.
மேலும் இந்தப் படத்தில், ஜெய்லர் பட வில்லன் விநாயகம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் நாளை (நவம்பர் 27) ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் அன்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், ’களம் காவல்’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாகவும் புதிய வெளியீட்டு தேதி விடைவில் அற்விக்கப்படும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது. தற்போது ’களம் காவல்’ திரைப்படம் வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.