’வா வாத்தியார்’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடிகர் கார்த்தி 2007ல் வெளியான பருத்திவீரன் திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் . தொடர்ந்து நான் மகான் அல்ல, சிறுத்தை, மெட்ராஸ், கைதி, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற வெற்றிப்படங்களை கொடுத்த கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இணைந்தார்.
தற்போது இவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்
முன்னதாக இப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது ’வா வாத்தியார்’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அதன் படி இப்படம் வருகிற டிச. 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.