Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படம் - தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு!

09:27 PM Jun 23, 2024 IST | Web Editor
Advertisement

நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் 9வது திரைப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

Advertisement

'அட்டக்கத்தி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பா.ரஞ்சித் கார்த்தியை வைத்து இயக்கிய 'மெட்ராஸ்' திரைப்படத்தின் மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்து தனது 3 வது திரைப்படத்தை ரஜினிகாந்தை வைத்து இயக்கினார். ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணியில் கடந்த 2016 வெளியான கபாலி பெரிதும் பேசப்பட்ட நிலையில் தொடர்ந்து ரஜினியை வைத்து 'காலா' திரைப்படத்தை இயக்கினார்.

இயக்குனராக மட்டுமின்றி நீலம் என்று அமைப்பைத் தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இதுவரை நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, ரைட்டர், ஜே - பேபி, ப்ளூ ஸ்டார் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த இங்கிலாந்து எம்.பி. வேட்பாளர்!

நீலம் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'நட்சத்திரம் நகர்கிறது' திரைப்படம் சிறந்த வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தற்போது நடிகர் விக்ரமை வைத்து 'தங்கலான்'  திரைப்படத்தை தனது நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் தயாரித்து இயக்கி வருகிறார் பா.ரஞ்சித். இந்நிலையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் புதிய திரைப்படம் ஒன்று உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ள நீலம் தயாரிப்பு நிறுவனம் நாளை மாலை இந்த திரைப்படத்தின் தலைப்பு மற்றும்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
#FirstLookcinemamovieNeelamProductionsPaRanjithtitle
Advertisement
Next Article