Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வந்தே பாரத் ரயில் முன்பதிவில் புதிய வசதி அறிமுகம்!

வந்தேபாரத் ரயில்களில் கடைசி 15 நிமிடங்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
12:31 PM Jul 18, 2025 IST | Web Editor
வந்தேபாரத் ரயில்களில் கடைசி 15 நிமிடங்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement

தெற்கு ரயில்வே பயணிகளின் வசதிக்காக புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில், குறிப்பிட்ட சில வந்தேபாரத் ரயில்களில் கடைசி 15 நிமிடங்களுக்கு முன்பு முன்பதிவு செய்து கொள்ளும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

Advertisement

"வந்தேபாரத் விரைவு ரெயில்கள் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு காலியிடம் இருப்பது தெரிவிக்கப்படும். அதில் முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படுகிறது. புதிய நடப்பு முன்பதிவு வசதியானது குறிப்பிட்ட 8 வந்தே பாரத் விரைவு ரெயில்களில் மட்டும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, மங்களூரு சென்டிரல்- திருவனந்தபுரம் சென்டிரல் (வண்டி எண். 20631), திருவனந்தபுரம் சென்டிரல்-மங்களூரு சென்டிரல் (20632), சென்னை எழும்பூர்- நாகர்கோவில் (20627), நாகர்கோவில்- சென்னை எழும்பூர் (206628) கோயம்புத்தூர்-பெங்களூரு கண்டோன்மென்ட் (20642), மங்களூரு சென்டிரல்- மட்காவ் (20646), மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் (20671), சென்னை சென்டிரல்-விஜயவாடா (20677) ஆகிய 8 வந்தே பாரத் ரெயில்களிலும் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Chennainew facilitysouthernrailwayTraintrain bookingVande BharatVandeBharattrain
Advertisement
Next Article