Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Boss-க்கு உணவு கொண்டுவர மறுத்த ஊழியர் பணிநீக்கம் | கொதித்தெழுந்த இணையவாசிகளால் நடந்த ட்விஸ்ட்! என்ன தெரியுமா?

04:12 PM Sep 27, 2024 IST | Web Editor
Advertisement

சீனாவில் புதிதாக பணியில் சேர்ந்த பெண் ஒருவர் தனது Boss-க்கு காலை உணவை வாங்க வர மறுப்பு தெரிவித்ததால், அவர் பணிலிருந்து நீக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஒரு சீனக் கல்வி நிறுவனத்தில் லூ என்ற பெண் புதிதாக பணிக்கு சேர்ந்துள்ளார். இவர் பணிக்கு சேர்ந்ததிலிருந்து தனது மேற்பார்வையாளருக்கு ஹாட் அமெரிக்கனோ (காபி) மற்றும் ஒரு முட்டை தினந்தோறும் எடுத்துவர வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார். இதற்கு மறுப்பு தெரிவித்த லூ, இது தனது வேலை இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும் அவரின் தனிப்பட்ட உதவியாளராக நான் வேலைக்கு வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சில நேரங்களில் தண்ணீர் எடுத்துவர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து இதுகுறித்து லூ தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “தனிப்பட்ட உதவியாளராக நான் பணியமர்த்தப்படவில்லை. ஆனால் எனது முதலாளி தினமும், காலையில் அவளுடைய காலை உணவு தேவைகளை நான் கையாளுவேன் என்று எதிர்பார்க்கிறார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து மனிதவளத் துறையிடம் இந்த பிரச்னை குறித்து கூறியுள்ளார். ஆனால் அவர்கள் இழப்பீடு தொகை எதுவும் கொடுக்க முடியாது எனவும், உடனடியாக பணியிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் இணையத்தில் வைரலானதையடுத்து, நிறுவனத்திடன் விசாரணை நடத்த வேண்டும் என இணையவாசிகள் தெரிவித்தனர். தொடர்ந்து தங்கள் கண்டனங்களையும் தெரிவித்தனர். இணையத்தில் பெரும் பின்னடைவைப் பெற்ற பிறகு, நிறுவனம் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

பொதுமக்களின் அழுத்தத்தின் கீழ் லூவை மீண்டும் பணியில் சேர உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் லூவின் மேற்பார்வையாளரான லியுவை பணிநீக்கம் செய்து நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags :
chinaCoffeeeggNew Joinee
Advertisement
Next Article