Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருப்பதியில் சாமி தரிசனம் செய்த பி.வி.சிந்து - வெங்கட தத்தா தம்பதி!

09:47 PM Dec 27, 2024 IST | Web Editor
Advertisement

பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து அவரது கணவருடன் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையாக வலம் வருபவர் பி.வி.சிந்து. உலக பேட்மிண்டன் அரங்கில் ஏராளமான சாதனைகளைப் படைத்துள்ள இவர், இந்தியாவுக்காக 2 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

முன்னாள் உலக சாம்பியனான பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் (டிச.22) அன்று திருமணம் நடைபெற்றது. அதை தொடர்ந்து (டிச.24) ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் புதுமண தம்பதிகளான பிவி சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய் இருவரும் இன்று திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், இருவரும் திருப்பதி கோவிலை சுற்றி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

Tags :
PVSindhuSamytharisanamthirupathiVenkataDattaSai
Advertisement
Next Article