Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்திய ரயில்வேயின் யுடிஎஸ் செயலியில் புதிய அட்டேட்! முன்பதிவில்லா டிக்கெட், நடைமேடை டிக்கெட் பெறும் முறை எளிமையாக்கப்பட்டது!

01:42 PM Apr 30, 2024 IST | Web Editor
Advertisement

யூடிஎஸ் செயலி மூலம் ரயில் நிலையம் உட்பகுதி தவிர வேறு எங்கிருந்து வேண்டுமானாலும் டிக்கெட் எடுத்துக் கொள்ளும் வகையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. 

Advertisement

டிக்கெட் கவுன்ட்டரில் நீண்ட நேரம் காத்திருக்காமல், எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில், யூடிஎஸ் மொபைல் செயலி மூலமாக முன்பதிவில்லாத ரயில் டிக்கெட், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட், மின்சார ரயில்களுக்கான டிக்கெட் ஆகியவற்றை பெறும் வசதி உள்ளது.

இருப்பினும் இந்த செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பொதுமக்களுக்கு முக்கிய கட்டுப்பாடு ஒன்று இருந்தது.  இதன்படி, குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே இருந்து டிக்கெட்களை பதிவு செய்ய முடியாத நிலை இருந்தது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். ‛ஜியோ ஃபென்சிங்' என்கிற இந்த கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், ஜியோ பென்சிங்கின் வெளிப்புற எல்லையை ரயில்வே நிர்வாகம் நீக்கியுள்ளது.

இதையும் படியுங்கள் : “புதுக்கோட்டை – நீர் தேக்க தொட்டியில் மாட்டு சாணம் கலக்கப்படவில்லை!” – ஆய்வில் வெளியான தகவல்!

அந்த வகையில் தற்போது ‛ஜியோ ஃபென்சிங்' கட்டுப்பாடு என்பது யுடிஎஸ் செயலியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயணிகள் எங்கிருந்து வேண்டுமானாலும் முன்பதிவில்லாத டிக்கெட், நடைமேடை டிக்கெட், சீசன் டிக்கெட், மின்சார ரயில்களுக்கான டிக்கெட் ஆகியவற்றை யுடிஎஸ் செயலி மூலம் எடுத்து கொள்ள முடியும்.

குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்து தான் யுடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. ஆனால், டிக்கெட் எடுத்த 2 மணி நேரத்துக்குள் பயணம் தொடங்கும் நிலையத்தை அடைந்துவிட வேண்டும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags :
Railway officialsRailway stationTamilNaduTicketsTrainUTS app
Advertisement
Next Article