Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திரைப்படங்களுக்கு புதிய சான்றிதழ் முறை - #CBFC அறிமுகம்!

06:38 AM Nov 17, 2024 IST | Web Editor
Advertisement

திரைப்படங்களுக்கு புதிய சான்றிதழ் முறையை மத்திய திரைப்பட தணிக்கை குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisement

மத்திய திரைப்பட தணிக்கைக் குழு, படங்களுக்கு யு, ஏ, மற்றும் ‘யுஏ’ ஆகிய பிரிவுகளில் சான்றளித்து வருகிறது. இப்போது திரைப்படங்கள் யு, ஏ, யுஏ7 , யுஏ13 , யுஏ16 ஆகிய பிரிவுகளில் சான்றிதழ் முறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. கடந்த அக்., 24ம் தேதி முதல் இந்த பிரிவுகளில் சான்றிதழ் வழங்கப்படுகின்றன.

இதில் ‘யு’ வகை அனைவரும் பார்க்கும் படமாகவும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான படங்களுக்கு ‘ஏ’ வகையும் வழக்கம் போல இருக்கும். 7, 13, 16 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் பார்க்கும் வகையில் யுஏ7 , “யுஏ 13 , யுஏ 16 என அந்தந்த வயதைப் பொறுத்து வகைப் படுத்தப்பட்டுள்ளன. ஒரு படத்தைப் பார்க்கக் குழந்தைகளை அனுமதிப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும் முன், அப்படத்தின் சான்றிதழ் விவரத்தை பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும். திரைப்படத்தைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள cbfcindia.gov.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.

Tags :
CBFCCensor BoardFilm CertificationNews7Tamil
Advertisement
Next Article