Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்ய புதிய செயலி - பட்ஜெட் உரையில் அறிவிப்பு!

12:45 PM Feb 01, 2024 IST | Web Editor
Advertisement

ஊட்டச்சத்துக் குறைபாடுகளைச் சரி செய்வதற்காக புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என்று பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Advertisement

மக்களவை தேர்தல் இந்தாண்டு நடைபெற உள்ள நிலையில்,  அதற்கான தேதி மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.  இதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களவைத்  தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன.

இதையும் படியுங்கள் ; QR குறியீட்டை ஸ்கேன் செய்தால் நலத்திட்டங்கள் பற்றி பேசும் முதலமைச்சர்… நாட்டிலேயே முதன்முறையாக புதிய முயற்சி!

இந்நிலையில்,  நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ந டப்பு ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதுவரை 5 முறை முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிர்மலா சீதாராமன், தொடர்ந்து 6-வது முறையாக இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

தொடர்ந்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய செயலி பற்றிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

இதில், ஊட்டச்சத்துக் குறைபாடுகளைச் சரி செய்வதற்காக புதிய செயலி அறிமுகம் செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  மேலும், ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் அனைத்து அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும் மருத்துவ காப்பீடு வழங்கப்படும்.  கர்பப் பை புற்றுநோயை தடுக்க 9 முதல் 14 வயதுள்ள பெண்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tags :
BudgetBudget 2024budget sessionFinance BudgetFinance MinisterIndiainterim budgetlok shabaNarendra modiNirmala sitharamanparlimentPM ModiPMO IndiaRajya Shaba
Advertisement
Next Article