Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘மகாராஜா’ திரைப்படத்தை டிரம்புடன் தொடர்பு படுத்திய நெட்டிசன்கள்! என்ன வேலை செய்து வைத்திருக்காங்க பாருங்க!

07:09 PM Jul 19, 2024 IST | Web Editor
Advertisement

‘மகாராஜா’ திரைப்படத்துக்கும் டிரம்ப் பரப்புரைக்கும் தொடர்பா? அட நாங்க சொல்லல நம்ம நேட்டிசன்கள் சொல்ராங்க... அப்டி என்ன சொல்ராங்கனு பாப்போம் வாங்க... 

Advertisement

அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுகிறார். தேர்தலுக்கு சில மாதங்களே இருப்பதால் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

இதற்கிடையே கடந்த வாரம் டிரம்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இருப்பினும், நல்வாய்ப்பாக அந்த துப்பாக்கிக் குண்டு அவரது காதை மட்டும் பதம்பார்த்து சென்றதால், அவர் உயிர் பிழைத்தார்.

இந்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டோன்ல்ட் டிரம்ப் (Donald Trump) மீது நடத்தப்பட்ட கொலை முயற்சியைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் வித்தியாசமான முறையில் அவருக்கு ஆதரவைத் தெரிவிக்கின்றனர். படுகொலை முயற்சிக்குப் பிறகு குடியரசுக் கட்சியின் மாநாட்டில் முதன்முறையாக மக்களை சந்தித்த டிரம்ப் தனது காதில் கட்டு போட்டிருந்தார். இதனை அடுத்து மாநாட்டின் இரண்டாம் நாளில் அவரது ஆதரவாளர்களும் தங்கள் காதில் கட்டு போட்டவாறு மாநாட்டில் பங்கேற்று டிரம்புக்கான தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

டிரம்ப் துப்பாக்கியால் சுடப்படுவதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்புதான் விஜய்சேதுபதி நடிப்பில் உருவான மாகாராஜா திரைப்படம் வெளியானது. குப்பை தொட்டியை தேடுவதா தொடங்கும் அந்த கதை எதிர்பாராத முடிவை நோக்கி செல்வது மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. சுமார் 100 கோடி ரூபாய் வசூலையும் குவிச்சது.

சரி... இதுக்கும் டிரம்புக்கும் என்னப்பா தொடர்புன்னு கேக்குரீங்களா? இருக்கே...

அட இருக்கோ இல்லயோ நம்ம நெட்டிசன்கள் தொடர்ப உருவாக்கீட்டாங்க..

அது என்னன்னா? மகாராஜா திரைப்படத்துல விஜய்சேதுபதி கேரக்டர் காதில் கட்டுபோட்டுகிட்டு வர்ர புகைப்படத்தை வைத்துதான் அந்த திரைப்படத்துக்கு பிரமோசன் செய்யப்பட்டது. இந்த நிலையிலதான், டிரம்பும் காதில் கட்டு போட்டுகிட்டே சுத்தி அமெரிக்காவுல டிரண்டாக்கிட்டாரு.

இந்த இரண்டு நிகழ்வுகளையும் ஒன்னு சேத்த நம்ம நேடிசன்கள், அமெரிக்க அதிபர் தேர்தலுலயே மகாராஜா திரைப்படத்துக்கு பிரமோசன் நடக்குது அப்டீனு மீம்ஸ்கள பறக்கவிட ஆரம்பிச்சிட்டாங்க... அதுவும் டிரம்பே தலைமையேற்று மகாராஜா திரைப்படத்துக்கு பிரமோசன் செய்வதா பல மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகுது. தமிழுல மட்டும் இல்ல தெலுங்கு மொழியிலல்லாம் மீம்ஸ் பறக்குதுனா பாருங்களேன்..

இப்ப நெட்ல இதுதாங்க வைரலு... மகாராஜா திரைப்படம் விஜய்சேதுபதிக்கும் அந்த திரைப்படத்தின் இயக்குனர் நிதிலன் சாமிநாதனுக்கும் மகுடம் சூட்டீருச்சு. டிரம்ப் காதுல கட்டு போட்டுகிட்டு அமெரிக்காவின் மகாராஜாவா சாரி... அதிபரா ஆவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்...

Tags :
#VJSAmericaAnurag KashyapAssassination AttemptDonald trumpfbiMaharajanews7 tamilNews7 Tamil UpdatesPresidential ElectionThomas CrookUS ElectionVijay sethupathiVJS50
Advertisement
Next Article