Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘டெஸ்ட்’ படத்தின் வெளியீட்டு உரிமத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ்!

மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடித்துள்ள ‘டெஸ்ட்’ படத்தின் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
07:32 PM Feb 04, 2025 IST | Web Editor
Advertisement

மாதவன், சித்தார்த், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டெஸ்ட்’. ஒய் நாட் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்த சசிகாந்த், ‘டெஸ்ட்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

Advertisement

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக கடந்தாண்டு ஜனவரி மாதம் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு படக்குழு அறிவித்தது. அதோடு இப்படம் கடந்தாண்டு சம்மரில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இப்படம் குறித்து அதன் பின்பு எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. படமும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் டெஸ்ட் திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
இப்படத்தின் டீசரை வெளியிட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனம், படத்தை நேரடியாக விரைவில் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது. ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்த  தனுஷின் ஜகமே தந்திரம் படத்திற்கு பிறகு, அந்நிறுவனம் தயாரித்துள்ள டெஸ்ட் படத்தின் நேரடி வெளியீட்டு உரிமைத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

Tags :
madhavanMeera JasminenayantharaNetflixSiddarthtest
Advertisement
Next Article