Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் - பிரதமர் மோடி மரியாதை !

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
12:01 PM Jan 23, 2025 IST | Web Editor
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Advertisement

சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 128-வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுபாஷ் சந்திரபோசின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் ஜனவரி 23-ம் தேதி பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2022-ம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.

Advertisement

இந்நிலையில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

"பராக்கிரம தினமான இன்று, நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது. அவர் துணிச்சலையும் மன உறுதியையும் வெளிப்படுத்தினார். அவர் கனவு கண்ட இந்தியாவை கட்டியெழுப்ப நாம் பாடுபடும் போது அவரது தொலைநோக்குப் பார்வை நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :
birth anniversaryNarendra modiNetaji Subhas Chandra Boseprime minister
Advertisement
Next Article