Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நேபாள விமான விபத்து - கருப்புப் பெட்டி மீட்பு!

10:07 AM Jul 26, 2024 IST | Web Editor
Advertisement

நேபாளத்தில் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. 

Advertisement

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் திருபுவன் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் (ஜுலை 24) காலை 11 மணியளவில் பைலட், விமான நிலைய ஊழியர்கள் உட்பட்ட 19 பேருடன் தனியார் நிறுவன விமானம் போக்காரா நகருக்கு புறப்பட்டது. அப்போது ஓடுதளத்தில் இருந்து மேல் எழ முயன்றபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுதளத்தை விட்டு வெளியே சென்று விபத்தில் சிக்கியது.

ஓடுதளத்தின் மேல் எழுந்த விமானத்தின் ஒரு பக்க இறக்கை ஓடுதளத்தில் உரசிய நிலையில், ஒருசில நொடிகளிலேயே முழுவதுமாக பற்றி எரிந்தது.  சம்பவம் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  விபத்தால் அந்த இடம் முழுவதுமே கரும்புகையால் சூழ்ந்தது. இதில், விமானத்தில் இருந்த 18 பேர் உயிரிழந்தனர். விமானி ஷக்யா படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து தொடர்பான பதைபதைக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியது. இந்த நிலையில், நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்நாட்டு பொது விமானப் போக்குவரத்து அமைப்பின் இணை இயக்குநா் ஹன்ஸா ராஜ் பாண்டே கூறியதாவது,

"புதன்கிழமை விபத்துக்குள்ளான சிறிய ரக விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது.  அந்த பெட்டி இந்த விபத்து குறித்து விசாரணை நடத்திவரும் நிபுணா் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக, பொது விமானப் போக்குவரத்து முன்னாள் பொது இயக்குநா் ரத்தீஷ் சந்திர லால் தலைமையில் 5 நிபுணா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு விபத்துத் தடுப்பு பரிந்துரைகளுடன் தனது விசாரணை அறிக்கையை 45 நாள்களுக்குள் சமா்ப்பிக்கும்.  விபத்தில் உயிரிழந்தவா்களின் உடல்களை அடையாளம் காணும் பணிகள் தொடா்ந்து நடைபெற்றுவருகின்றன. விரைவில் அவை அடையாளம் காணப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்படும்" என்றாா் அவா்.

Tags :
black boxFligh CrashKathmandu AirportNepalNepal Flight Crash
Advertisement
Next Article