Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்திய ஆன்டிபயாடிக் மருந்துக்கு தடைவிதித்த நேபாளம்!

08:07 PM Jun 19, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவின் ஆன்டிபயாடிக் மருந்து, கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாக் கூறி அம்மருந்துக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. 

Advertisement

கடும் பக்க விளைவுகளை கொண்டிருப்பதாக கூறி, இந்தியாவின் பயோடக்ஸ் மருந்து விற்பனை மற்றும் விநியோகத்திற்கு நேபாளின் மருந்து கட்டுப்பாட்டுத் துறை தடைவிதித்துள்ளது. இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான ஸைடஸ் ஹெல்த்கேர் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த பயோடக்ஸ் மருந்து, அதில் குறிப்பிட்ட தயாரிப்பு முறைகளைப் பின்பற்றவில்லை என்பது, நேபாளத்தின் மருந்து ஒழுங்குமுறை ஆய்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்திருப்பதாக அந்நாட்டின் செய்தி நிறுவனமாக காத்மாண்டு போஸ்ட் தெரிவித்துள்ளது.

அதன் தகவலின்படி, பயோடக்ஸ் மருந்து குறித்த அடுத்த அறிவிப்பு வரும்வரை அதன் விற்பனை, இறக்குமதி மற்றும் விநியோகத்தை நிறுத்தி வைக்குமாறு தயாரிப்பு நிறுவனம், இறக்குமதியாளர்கள், விநியோகிப்பாளர்கள் என அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக மருத்துக் கட்டுப்பாட்டுத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து நேபாள மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை, “பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மருந்துப் பிரிவு, பாதுகாப்பானது அல்ல. நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டால் அவர்களது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த மருந்தை தடை செய்வதால் பாக்டீரியா பாதிப்புகளால் அவதிப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், இதே கூட்டு சேர்க்கைகளைக் கொண்டு வேறு நிறுவனங்கள் தயாரித்த மருந்துகள் தற்போது விற்பனையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்குறிப்பிட்டிருக்கும் பயோடக்ஸ் 1ஜிஎம் மருந்துதான் நேபாள ஆய்வுக் கூடத்தில் பரிசோதிக்கப்பட்டது. அதன்பிறகு அதன் விற்பனை தடை செய்யப்பட்டது. இந்த மருந்து, மூளை, நுரையீரல், காது, சிறுநீரக பாதை தொற்று, தோல் மற்றும் தசைகளில் பாக்டீரியல் பாதிப்புகள் ஏற்படும் போது அதனைக் குணப்படுத்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

Tags :
AntibioticBiotaxHealth RisksNepal Drug Administration
Advertisement
Next Article