நேபாளம் | மழை வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 52 பேர் உயிரிழப்பு!
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 3ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடைய, தொடர் மழையால், பாக்மதி, திரிசூலி, கிழக்கு ராப்தி, லால்பகையா மற்றும் கமலா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதையும் படியுங்கள் : மகளிர் உலகக்கோப்பை | பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!
இதனால், அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். நேபாளத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 52 பேர்உயிரிழந்துள்ளனர். மேலும், 29 பேர் காயமடைந்துள்ளனர். திரிபுவன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. வெள்ளம் பாதித்த பகுதியில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.