Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் ரஜினியுடன் பிறந்தநாளை கொண்டாடிய நெல்சன்

இயக்குநர் நெல்சன் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் ரஜினியுடன் இணைந்து தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
05:56 PM Jun 21, 2025 IST | Web Editor
இயக்குநர் நெல்சன் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் ரஜினியுடன் இணைந்து தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
Advertisement

கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், விஜய் நடித்த பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடந்த 2023ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தினை இயக்கி இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தார் நெல்சன். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

Advertisement

இதையும் படியுங்கள் : அதிமுக எம்.எல்.ஏ. மறைவு – இபிஎஸ் இரங்கல்!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஜெயிலர் திரைப்படம் ரூ.600 கோடி வசூலைக் கடந்து மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இயக்குநர் நெல்சன் தனது 41வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்த நிலையில், இயக்குநர் நெல்சன் இன்று தனது பிறந்தநாளை நடிகர் ரஜினிகாந்த் மற்றும் யோகி பாபுவுடன் இணைந்து 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பட நிறுவனம் தங்களது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

Tags :
Happy Birthday NelsonHBD NelsonjailerJailer 2nelsonNelson dilipkumarRajiniRajinikanthThalaivar
Advertisement
Next Article