Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நெல்லை கொலை சம்பவம் - அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

08:20 PM Dec 20, 2024 IST | Web Editor
Advertisement

நெல்லை மாவட்ட நீதிமன்றத்திற்கு வெளியே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை இளைஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது, மாவட்ட நீதிமன்றங்களில் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக, அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்ற வளாகத்தில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனை ஏன் காவல்துறை தடுக்கவில்லை? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன் விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Madras High CourtNellai MurderTN Govt
Advertisement
Next Article