Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நீட் கருணை மதிப்பெண் விவகாரம் - உச்சநீதிமன்றத்தில் புதிய மனு!

02:33 PM Jun 10, 2024 IST | Web Editor
Advertisement

நிகழாண்டுக்கான தேர்வை மீண்டும் நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில்,  தற்போது கருணை மதிப்பெண் விவகாரத்தில் மேலும் ஒரு புதிய மனு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக சர்ச்சை தொடங்கி கருணை மதிப்பெண் வழங்கியதிலும் முரண்பாடுகள் உள்ளதாகவும் இதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று தேசிய தேர்வு முகமைக்கு 2 ஆயிரம் மாணவர்கள் கடிதம் எழுதினர்.  நீட் மறுதேர்வு நடத்த வலியுறுத்தி சுமார் 2 ஆயிரம் மாணவர்கள் கையெழுத்திட்டு கோரிக்கை மனு அடங்கிய கடிதத்தை எழுதினர்.

அந்தக் கடிதத்தில், பீகாரில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்,  கருணை மதிப்பெண் வழங்கியதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டு,  இதுவரை இல்லாத அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்றவைகளை சுட்டிக்காட்டி மறுதேர்வு நடத்த கோரிக்கை வைத்தனர்.

தங்களின் எதிர்காலம் தொடர்புடைய விவகாரம் என்பதால் மத்திய அரசும் தேசிய தேர்வு முகமை ஆகியவையும் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.  தேர்வு முடிவுக்கு முன்பே ஒஎம்.ஆர் ஷீட் மற்றும் வினாக்களுக்கான விடைகளையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.  தேர்வு முடிவு வெளியிடப்பட்ட போது ஒஎம்.ஆர் ஷீட்டுடன் ஒப்பிடுகையில்,  மாறுபட்ட மதிப்பெண்கள் போடப்பட்டு இருப்பதாக பல மாணவர்கள் புகார்களை முன்வைத்தனர்.

நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  அதே வேளையில்,  நீட் தேர்வில் எந்த குளறுபடியும் இல்லை, நேர்மையான முறையிலேயே நடத்தப்பட்டது எனவும் தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்தது.

நிகழாண்டுக்கான தேர்வை மீண்டும் நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில்,  தற்போது கருணை மதிப்பெண் விவகாரத்தில் மேலும் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது.  இந்த மனு விரைவில் விசாரணைக்காக உச்சநீதிமன்றத்தில் பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
examNEETNEET UG2024scamstudents
Advertisement
Next Article