Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#NEET விவகாரம்: அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு!

11:04 AM Sep 25, 2024 IST | Web Editor
Advertisement

நீட் தேர்வு மோசடிகளை தடுக்க அமைக்கப்பட்ட குழு அறிக்கையை தாக்கல் செய்ய, மேலும் 3 வாரம் அவகாசம் கோரி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

Advertisement

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 5ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில், வினாத்தாள் கசிவு  உட்பட  பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, பீகார், ஜார்கண்ட், குஜராத், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமையை சீரமைக்கவும், நீட் தேர்வை குளறுபடி இல்லாமால் நடத்த பரிந்துரை வழங்கவும் இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 7 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த சூழலில், நீட் தேர்வு மோசடிகளை தடுக்க அமைக்கப்பட்ட குழு, செப்.30ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், நீட் தேர்வு மோசடிகளை தடுக்க அமைக்கப்பட்ட குழு அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 3 வாரம் அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், "மாணவர்கள், கள்வியாளர்களிடமிருந்து 37,000 கருத்துகள் பெறப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்து இறுதி பரிந்துரை தயாரிக்க அக்டோபர் 21ம் தேதி வரை அவகாசம் வேண்டும்" என கோரப்பட்டுள்ளது.

Tags :
CBICentral GovtNEETNEET UG2024news7 tamilNews7 Tamil UpdatesSupreme court
Advertisement
Next Article