Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெளியானது நீட் தேர்வு முடிவுகள்... எப்படி பார்க்கலாம்?

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
01:17 PM Jun 14, 2025 IST | Web Editor
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
Advertisement

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் 4ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் மாணவர்களும், தமிழ்நாட்டில் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியரும் எழுதினர். இந்தத் தேர்விற்கான தற்காலிக விடைக் குறிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த 3ம் தேதி வெளியிட்டது. மாணவர்கள் இந்த விடைக்குறிப்பு குறித்த தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் கடந்த 5ம் தேதியுடன் நிறைவடைந்தது.

Advertisement

மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனைகளைப் பரிசீலித்த பிறகு, இறுதி விடைக்குறிப்பு (பைனல் ஆன்ஷர் கீ) தயாரிக்கப்படும். அதன் அடிப்படையிலேயே தேர்வு முடிவுகளும், தகுதிப் பட்டியலும் வெளியிடப்படும். இந்த நிலையில், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் தற்போது (ஜுன் 14) வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை https://neet.nta.nic.in/ இந்த என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பதிவிறக்கம் செய்ய முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அதில் ‘NEET UG 2025 Result’ என்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும். இதன்பிறகு தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்து சமர்ப்பித்தால், மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை பிடிஎப் வடிவில்  பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tags :
MBBSNEETNEET 2025neet examNEET ResultNEET UGNEET UG 2025news7 tamilresult
Advertisement
Next Article