Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"நீட் தேர்வு வினாத் தாள் கசிவு தொடர்பான வழக்கு - தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு!

05:26 PM May 17, 2024 IST | Web Editor
Advertisement

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

Advertisement

இந்தியாவில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ்., போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் இந்த தேர்வு மே 5ம் தேதி நடைபெற்றது.தமிழ்நாட்டில் சுமார் 1.50 லட்சம் மாணவ, மாணவியர் உள்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர். தமிழ் உள்பட 13 மொழிகளில் 557 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.

இந்நிலையில்,  பீகார், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில்  நீட் தேர்வு வினாதாள்கள் கசிந்து முறைக்கேடு நடந்துள்ளது. இந்நிலையில், இம்முறைக்கேடில் பலர் கைது செய்யபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து,  நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இதையும் படியுங்கள் : “காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி தேர்தலில் வெற்றி பெற்றால் ராமர் கோயிலை இடிப்பார்கள்” – பிரதமர் மோடி பேச்சு!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நீட் தேர்வு முடிவுகளை வெளியிட எந்த ஒரு தடையும் இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு கோடைக்கால விடுமுறைக்கு பிறகு, ஜூலை மாதம் விசாரிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வழக்கு ஜூலை மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் மாதம் வெளியாக உள்ள நீட் தேர்வு முடிவுகளுக்கு தடை இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
CentralGovtIndiaNEETNeetExamNTAOrderquestionpaperQuestionPaperLeakSupremeCourt
Advertisement
Next Article