Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நீட் தேர்வு முறைகேடு வழக்கு - விசாரணை ஜூலை 18க்கு ஒத்திவைப்பு!

02:15 PM Jul 11, 2024 IST | Web Editor
Advertisement

நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கை ஜூலை 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

Advertisement

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி தேசிய அளவில் நடைபெற்றது. இதனைத்தொடந்து இத்தேர்விற்கான முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியானது. இத்தேர்வில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, நீட் வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு சிபிஐ-யிடம் ஒப்படைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிய விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி, மறுதேர்வு ஜூன் 23 ஆம் தேதி நடத்தப்பட்டது.

இதில் 813 மாணவர்கள் மட்டும் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். மீதமுள்ள 48 சதவீதம் மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்கள் இல்லாமல் உண்மையான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. மறுதேர்வு எழுதியவர்களின் முடிவுகள் ஜூன் 30 ஆம் தேதி வெளியானது. மேலும் மாணவர்களில் மாற்றியமைக்கப்பட்ட புதிய மதிப்பெண் தரவரிசைகள் வெளியிடப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பான, 30க்கும் மேற்பட்ட வழக்குகளை தொகுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வில் பெரிய அளவில் ரகசியத்தன்மை மீறப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லாத நிலையில், தேர்வை ரத்து செய்யக்கூடாது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. ஆதாரங்கள் இல்லாதபட்சத்தில் முழு தேர்வையும் ரத்து செய்தால் இந்தாண்டு நேர்மையாக தேர்வெழுதிய லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என மத்திய அரசு நேற்று தெரிவித்தது.

இதனையடுத்து இந்த வழக்கு இன்று விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் இந்த வழக்கு மீதான விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Tags :
Central GovtNEET UG TestNEET2024Supreme court
Advertisement
Next Article