Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#NEEK டிரெய்லர் வெளியீடு தேதி அறிவிப்பு!

தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
09:18 PM Feb 08, 2025 IST | Web Editor
தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள “நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்” படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

தனுஷ் இயக்கத்தில் தற்போது வெளியாகவுள்ள திரைப்படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தனுஷ் தனது சொந்த நிறுவனமான வுண்டர்பார் நிறுவனம் (Wunderbar films) மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார்.

Advertisement

இந்த திரைப்படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தில் அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தில் இடம்பெற்ற 'கோல்டன் ஸ்பாரோ', 'காதல் ஃபெயில்', 'ஏடி', 'புள்ள' ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வரும் 10ம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

Tags :
DhanushNeekReleaseTrailer
Advertisement
Next Article