குதுப்மினாரை ஒளிர வைத்து வாக்களிக்கப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தேர்தல் ஆணையம்!
மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை கருப்பொருளாக கொண்டு குதுப்மினார் மின் விளக்குகளால் இந்திய தேர்தல் ஆணையம் ஒளிர வைத்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கு, மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து ஏப்.26ம் தேதி 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த, 88 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : தமிழ்நாடு கோரியது ரூ.37,907 கோடி! கிடைத்தது வெறும் ரூ.276 கோடி தான்!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை கருப்பொருளாக கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் டெல்லியில் உள்ள வரலாற்று நினைவுச் சின்னமான குதுப் மினாரில் மின் விளக்குகளை ஒளிர வைத்துள்ளது.
இந்தியாவின் வளமான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தின் அடையாளமான குதுப்மினார் இரவில் தேர்தல் கொண்டாட்டத்தை பறைசாற்றியது காண்பவர்களை வெகுவாக கவர்ந்தது. தேர்தல் மற்றும் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் மின் விளக்குகள், சுவரொட்டிகள் மற்றும் காட்சிகளை இடம்பெற்றன.
குதுப்மினாரில் ஒளிரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தேர்தல் ஆணையம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டு, மக்களிடையே வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. அந்த எக்ஸ் வலைதள பதிவில் "குதுப்மினார் தேர்தல் கருப்பொருளுடன் அதனை கொண்டாடும் உணர்வை வெளிப்படுத்துகிறது.” என குறிப்பிட்டுள்ளது. இந்த வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.