Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#NDvsBAN 2-ஆவது டெஸ்ட் : 3-ஆம் நாள் ஆட்டமும் ரத்து!

03:20 PM Sep 29, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியா, வங்கதேசம் இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் போட்டியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement

வங்காளதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து, இந்தியா- வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் கடந்த நேற்று முன்தினம் (செப்.27) தொடங்கியது.

முதல் நாள் ஆட்டம் தொடங்கியதை அடுத்து, டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து இருந்த போது, போதிய வெளிச்சமின்மை மற்றும் மழையின் குறுக்கீடு காரணமாக ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

தொடர்ந்து இரண்டாவது நாள் ஆட்டம் கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற இருந்தது. ஆனால் கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக மைதானம் ஈரப்பதமாக உள்ளது. இதனால் இன்றைய ஆட்டமும் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

Tags :
BAN vs INDBangladeshind vs banIndianews7 tamilSportsSports UpdateTest Cricket
Advertisement
Next Article