Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் #Test!

08:56 PM Oct 02, 2024 IST | Web Editor
Advertisement

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'டெஸ்ட்' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

தமிழ் படம், விக்ரம் வேதா, இறுதிச்சுற்று, மண்டேலா, ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களை தாயரித்த சசிகாந்த், தற்போது 'டெஸ்ட்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். சக்தி ஸ்ரீகோபாலன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டெஸ்ட்' படம், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா நடித்த நெற்றிக்கண், மற்றும் ஒ2 ஆகிய படங்கள் நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியான நிலையில், தற்போது அவரின் 3-வது படமாக டெஸ்ட் ஒடிடி தளத்தில் வெளியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

Tags :
nayantharanews7 tamilottOTT Releaserelease dateSidharthtest
Advertisement
Next Article