நயன்தாரா பிறந்த நாள் - பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியிட்டு ’என்கேபி 111’ படக்குழு வாழ்த்து
தமிழில் ’அய்யா’ படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. இவர் ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்ய என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் அறம், இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா போன்ற படங்களில் முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகவும் வலம் வருகிறார்.
நடிகை நயன்தாரா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து அவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் தெலுங்கு முன்னணி நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 111வது படமான என்பிகே 111 படத்தில் நயன்தாரா இணைந்துள்ளார்.
நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு அவரது பர்ஸ்ட் லுக் வீடியோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் நயன்தாரா நான்காவது முறையாக இணைந்து பணியாற்றும் படம் இதுவாகும். முன்னதாக சிம்ஹா, ஜெய் சிம்ஹா மற்றும் ஸ்ரீ ராம ராஜ்ஜியம் ஆகிய படங்களில் பாலகிருஷ்னாவுடன் நயன்தாரா நடித்திருந்தார்.