Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

எம்எல்ஏவாக பதவியேற்றார் ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி!

12:40 PM Jun 06, 2024 IST | Web Editor
Advertisement

ஹரியாணா முதலமைச்சர் நயாப் சிங் சைனி,  இன்று பாஜக எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார்.

Advertisement

முதலமைசர்  நயாப் சிங் சைனிக்கு அவைத் தலைவர் கியான் சந்த் குப்தா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  கர்னால் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் முதலமைச்சர் சைனி தனது முக்கிய போட்டியாளரான காங்கிரஸின் தர்லோச்சன் சிங்கை எதிர்த்துப் போட்டியிட்டார்.

இந்த நிலையில் கர்னால் சட்டமன்றத் தொகுதியில் சுமார் 13,668 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முன்னாள் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. மனோர் லால் கட்டாருக்கு பதிலாக குருக்ஷேத்ர எம்பியான நயாப் சைனி கடந்த மார்ச் 12-ம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார்.

கர்னால் சட்டமன்ற இடைத்தேர்தலுடன்,  மாநிலத்தில் உள்ள 10 மக்களவைத் தொகுதியின் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 25-ம் தேதி நடைபெற்றது.

Tags :
haryanaHaryana PoliticsNayab Singh Saini
Advertisement
Next Article