Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#NationalFilmAward - தெரிந்த முகங்கள்... தெரியாத விஷயங்கள்..!

05:43 PM Aug 16, 2024 IST | Web Editor
Advertisement

தேசிய சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள சில நடிகர்கள் முக்கிய விவரங்கள் குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

தேசிய திரைப்பட விருதுகள் இந்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 70-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

மத்திய‌ அரசு ஒவ்வொரு ஆண்டும்  சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர், நடன இயக்குநர் என பல்வேறு  பிரிவுகளில் கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. இந்த முறை 2022ஆம் ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இந்த விருதுப் பட்டியலில் பலர் இடம்பெற்றிருந்தாலும் மிக முக்கிய சிலர் மட்டும் அதிகம் கவனிக்க  வைத்துள்ளனர். அவர்கள் யார் அவர்களது தெரியாத பக்கங்கள் குறித்து விரிவாக காணலாம்.

 ரிஷப் ஷெட்டி :

ரிஷப் ஷெட்டி ஆரம்பத்தில்  ரியல் எஸ்டேட் மற்றும் ஹோட்டல் வேலை போன்ற பல வேலைகளில் பணியாற்றியுள்ளார். அதே சமயம் அவர் வேலை பார்த்துக் கொண்டே திரைப்பட வாய்ப்புகளை தேடி அலைந்தார்.  மேலும் பெங்களூரில் உள்ள அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியில் திரைப்பட இயக்கத்தில் டிப்ளமோவும் பட்டம் பெற்றார் .  இதன் பின்னர் கன்னட திரைப்படத் துறையில் கிளாப் பாய், ஸ்பாட் பாய், உதவி இயக்குநராகப் பணியாற்றத் தொடங்கினார். இதன் பின்னர்  பணிபுரியும்போது ஒருநாள் ரக்‌ஷித் ஷெட்டியைச் சந்தித்தார்.  இருவரும் நண்பர்களாயினர்.

ரிஷப் ஷெட்டி துக்ளக் (2012) படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் சினிமா வில் அறிமுகமானார். பின்னர் ரக்ஷித் ஷெட்டி இயக்கிய உலிதவரு கண்டந்தே படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் . பின்னர் 2016 ஆம் ஆண்டில், ரக்ஷித் ஷெட்டி நடிப்பில் ரிஷப் ஷெட்டி இயக்கிய முதல் படமான ரிக்கி பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்து வரவேற்பைப் பெற்றது. இதன் பிறகு ரிஷப் ஷெட்டி இயக்கிய படமான  சர்க்காரி ஹி. பிரா. ஷாலே, காசர்கோடு, கொடுகே: ராமண்ணா ராய்  படம் விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்று, சிறந்த குழந்தைகள் படத்திற்கான தேசிய விருதை வென்றது . இப்படத்தின் மூலம் இயக்குநராக ரிஷப் ஷெட்டி முதல் தேசிய விருதை வென்றார்

இந்த நிலையில்தான் 2022 ம் ஆண்டு  வெளியான காந்தாரா படத்திற்கு சிறந்த நடிகர் விருது ரிஷப் ஷெட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது. காந்தாரா படத்தை அவரே இயக்கி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நித்யா மேனன்

தமிழில் மிக முக்கியமான அதே நிலையில் தமிழ் சமூகத்தால் கொண்டாடப்படாத Under Rated நடிகையாக இருப்பவர் நித்யா மேனன். 1998ம் ஆண்டு வெளியான ஹனுமான் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயணத்தை அவர் தொடங்கினார். தமிழ் , தெலுங்கு, மலையாளம் , கன்னடம் , ஆங்கிலம் உட்பட ஆறு மொழிகளை சரளமாக பேசக் கூடிய நடிகையாக இவர் உள்ளார்.

தமிழில் ஓ கே.. ஓ..கே , மெர்சல், காஞ்சனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கன்னட படங்களின் மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர் தமிழ் , தெலுங்கு, கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் கவனித்தக்க படங்களில் நடித்துள்ளார். இதுவரை நான்கு பிலிம்பேர் விருதுகள் ,  இரண்டு தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் மற்றும் இரண்டு நந்தி விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார்.

இந்த நிலையில் தனுஷுடன் இணைந்து அவர் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபனா கதாப்பாத்திரத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.

மானஷி பாரேக்

மும்பையைச் சார்ந்த நடிகையான மானஷி பாரேக் குஜராத்தை பூர்வீகமாக கொண்டவர். பள்ளிப் பருவத்திலிருந்தே இசையிலும் நடிப்பிலும் ஆர்வம் கொண்ட அவர் பள்ளிகளில் பல  நிகழ்வுகளில் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.  2003 இல் சேனல் V இன் பாப் ஸ்டாரின் (சீசன் 2) பங்கு பெற்று தனது திறமையை நிரூபித்துள்ளார்.  இப்போட்டியில் பிரபல இந்தி நடிகரான ஆயுஷ்மான் குரானாவுடன் 8 இறுதிப் போட்டியாளர்களில் மானஷியும் ஒருவராக இருந்தார்.

2004 இல் கிட்னி மஸ்த் ஹை ஜிந்தகி என்ற தொடரில் அறிமுகமானார். இதன் பின்னர் 2005 இல் ஸ்டார் ஒன் இன் இந்தியா காலிங் மூலம் பிரபலமடைந்தார் . இதனைத் தொடர்ந்து குஜராத் சினிமாவில் அறிமுகமாகி தனக்கென தனி இடத்தை பிடித்தார் மானஷி.

இந்த நிலையில்  கட்ச் எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Indian Film AwardManashi ParekNithya MenonRishab Shetty
Advertisement
Next Article