Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

 தேசிய அளவிலான கராத்தே போட்டி; வெண்கலம் வென்ற அரசு பள்ளி மாணவி சஸ்மிதா!

03:12 PM Dec 21, 2023 IST | Web Editor
Advertisement

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் திருப்பூரைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவி வெண்கல பதக்கத்தை வென்ற நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் மாணவியை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement

தேசிய அளவிலான கராத்தே போட்டி கடந்த 15ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை
டெல்லி சத்ரசால் மைதானத்தில் ஸ்கூல் கேம்ஸ் பெடரேசன் ஆப் இந்தியா சார்பில்
நடைபெற்றது.

இதையும் படியுங்கள் : “அரசு வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே மக்களின் துன்பத்திற்கு காரணம்!” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

இந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களை சேர்ந்த 150 கராத்தே மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு சார்பில் திருப்பூர் புதுராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்தவரும் சஸ்மிதா கலந்துகொண்டு திறமையை வெளிப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து, தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி சஸ்மிதா இரண்டாவது பரிசாக வெண்கல பதக்கம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இதனையடுத்து, இன்று பள்ளி வந்த மாணவி சஸ்மிதாவை பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி மாலை அணிவித்து மாணவிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

Tags :
Bronze medalNational Karate CompetitionSasmitaTamilNaduwon
Advertisement
Next Article