Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தேசிய பெண் குழந்தைகள் தினம் - தோழமை அமைப்பின் முன்னெடுப்பு!

09:29 PM Jan 24, 2024 IST | Web Editor
Advertisement

தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி பெண் குழந்தைகள் விளையாடுவதை உறுதி செய்வோம் என்ற கருப்பொருளை முன்வைத்து தோழமை அமைப்பு ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.

Advertisement

நாடு முழுவதும் குழந்தை பிறந்ததும், ஆணா அல்லது பெண்ணா என கேட்பதும், ஆண் குழந்தை என்றால் உயர்வாக கருதுவதும் ஒரு வழக்கமாக இருந்து வந்தது. இன்றைய காலகட்டத்தில் அந்த நிலைமை பெருமளவு மாறி விட்டது. இன்று பெண் குழந்தைகள் ஆண் குழந்தைகளுக்கு நிகராக, கல்வி, விளையாட்டு, கலைகள், கணிதம், விஞ்ஞானம், நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறு வயதிலிருந்தே தங்கள் திறமையை நிரூபித்து வருகின்றனர்.

மூட நம்பிக்கைகளால் பெண் குழந்தைகளுக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வந்த நிலைமை தற்காலத்தில் அறவே மாறி, பாலின பேதம் இல்லாமல் கிராமங்களிலும், நகரங்களிலும் பெண் குழந்தைகள் வளர்க்கப்படுகின்றனர். 2008ல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை எடுத்த முயற்சியால், ஆண்டுதோறும் ஜனவரி 24 அன்று, "தேசிய பெண் குழந்தைகள் தினம்" (National Girl Child Day) கொண்டாடப்படுகிறது.

பாலின சமத்துவம், கல்வி, உடலாரோக்கியம், பணி மற்றும் ஊதியம் உள்ளிட்ட அம்சங்களில் சமநிலையை ஊக்குவிக்கவும், பெண் குழந்தைகள் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் திட்டங்கள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் "பெண் குழந்தைகள் தினம்" கொண்டாடப்படுகிறது.

குழந்தைகள் திருமணம், பாலின பாகுபாடு மற்றும் பெண்களுக்கான வன்முறை ஆகியவற்றை சமூகத்திலிருந்து களைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக இந்த நாளை நாடு முழுவதும் கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில், தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி முன்னெடுப்பாக தோழமை அமைப்பு சில கருத்துகள் முன்வைத்துள்ளது.

தோழமை அமைப்பு தெரிவித்த கருத்துகளாவது:

இவ்வாறு தோழமை அமைப்பு கருத்துகளை முன்வைத்துள்ளது.

Tags :
#Sportsதோழமைchildrengirlgirl childGirl Child DayGirl kidNational Girl Child Daynews7 tamilNews7 Tamil UpdatesTamilNaduwomen
Advertisement
Next Article