Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும்" - ராமதாஸ் பேட்டி!

11:23 AM Apr 19, 2024 IST | Web Editor
Advertisement

தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

Advertisement

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது.  அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும்,  புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  பதற்றமான வாக்குச்சாவடிகளில் அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில்,  பாமக நிறுவனர் ராமதாஸ் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள ஶ்ரீ மரகதாம்பிகை அரசு உதவி பெறும் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார்.

இதனைத் தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  "மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.  அதனால் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழ்நாடு,  புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும்.  நரேந்திர மோடி 3-ஆவது முறையாக பிரதமர் ஆக வேண்டும்.

அதுவே இந்திய நாட்டுக்கு நன்மை பயக்கும்.  அனைவரும் சமத்துவம், சகோதரத்துவத்துடன் வாழ தேசிய கனநாயக கூட்டணி வெற்று பெற வேண்டும்" என்றார்.

 

Tags :
Election2024Elections with News7 tamilElections2024Lok Sabha Election2024Lok Sabha Elections 2024Parliament Elections2024PMKRamadoss
Advertisement
Next Article