அதிக விக்கெட்களை வீழ்த்தி அஸ்வினை முந்திய நாதன் லியோன் .
டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை, நாதன் லியோன் முந்தியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
அஸ்வினை முந்திய நாதன் லயன் :
பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் ஆன நாதன் லயன் மொத்தமாக ஐந்து இந்திய வீரர்களை வெளியேற்றினார்.இதில், முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வினை அவர் முந்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் 537 விக்கெட்டுகள் எடுத்துள்ள நிலையில், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முடிவில், நாதன் லயன் டெஸ்ட் போட்டிகளில் 538 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.