Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர் தான்" - முத்தையா முரளிதரன் கருத்து!

10:08 PM Apr 27, 2024 IST | Web Editor
Advertisement

உலகக்கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர் தான் என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். 

Advertisement

டாடா ஐபிஎல் 17வது சீசன் போட்டி மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கதில் தொடங்கி மே 26-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதில் சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஐதராபாத், டெல்லி, பஞ்சாப், குஜராத், லக்னோ, ராஜஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 46வது லீக் போட்டியில் சென்னை  மற்றம் ஹைதராபாத் அணிகள் நாளை மோதுகின்றன. இந்த போட்டி  சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற உள்ளது.  இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்  : குதுப்மினாரை ஒளிர வைத்து வாக்களிக்கப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தேர்தல் ஆணையம்!

கடந்த போட்டியில் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்த ஹைதராபாத் அணியும், லக்னோ அணியிடம் தோல்வியடைந்த சென்னை அணியும், தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் களம் காண்கின்றது. நடப்பு தொடரில் ஹைதரபாத் அணி அசுர பலத்துடன் விளையாடி வருவதால் சென்னை - ஹைதராபாத் அணிகள் மோதும் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் முத்தையா முரளிதரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது :

"பேட்டர்ஸ் இந்த தொடரில் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அடுத்த ஆண்டு
பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு உள்ளது. அதிக ரன்கள்
அடிப்பதற்கு இம்பாக்ட் பிளேயர் விதியும் ஒரு காரணம். பந்து வீச்சாளர்கள் விட பேட்டிங் செய்பவர்களுக்கு இம்பேக்ட் விதி மிக உதவியாக உள்ளது. வீரர்கள் அழுத்தம் இன்றி விளையாட அது உதவுகிறது " இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்படுவரா என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "அதிக விக்கெட்டுகளை அவர் எடுக்கும்பொழுது மட்டும் அவரை பற்றி பேசுகிறீர்கள். நடராஜன் நன்றாக விளையாடும் பொழுது நினைவில் வைத்துக்கொள்வர். அதன் பின்னர் அமைதியாகி விடுவர். கடந்த 5 ஆண்டுகளாக நடராஜன் சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஆனால் அவர் கவனிக்கப்படவில்லை. உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இடம் பெறுவாரா என்பது குறித்து நான் கருத்து கூற முடியாது அது இந்திய அணியின் தேர்வர்கள் கையில் உள்ளது.

ஆனால் என்னைப் பொருத்தவரை உலகக்கோப்பக்கான இந்திய அணியில் விளையாட நடராஜன் தகுதியானவர் என்று கருதுகிறேன். கடந்த ஐபிஎல் தொடரில் நடராஜனுக்கு காயம் ஏற்பட்டதால் சரியாக விளையாட முடியவில்லை. இந்த சீசனில் நடராஜன் நன்றாக விளையாடி வருகிறார்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதையடுத்து, சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியதாவது :

போட்டியின் நிலையை அறிந்து ஜடேஜா விளையாடுகிறார். பயிற்சியின் போதும் சிறப்பாக
தான் விளையாடி வருகிறார்.  ஆட்டத்தின் வெவ்வேறு விதமான சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு ஜடேஜா தன்னை செதுக்கி கொண்டு சிறப்பாக விளையாடுகிறார். கடந்த சில போட்டிகளில் சென்னையில் பனி பொழிவு பந்து வீச்சாளர்களுக்கு மிகுந்த சவாலாக இருந்து வருகிறது. இருந்த போதிலும், சென்னையின் களம் எங்களுக்கு நன்றாக
தெரியும். அதனால் சிறப்பாகவே பந்து வீச முயற்சி செய்து வருகிறோம். ஷிவம் துபே மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். முன்னதாக, ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் அடைந்த தோல்விக்கு சொந்த மண்ணில் பதிலடி கொடுக்க காத்திருக்கின்றனர் சென்னை அணியின் வீரர்கள்"

இவ்வாறு சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி தெரிவித்தார்.

Tags :
chennai super kingsCskCSKvsSRHIPLIPL2024SRHSRHvsCSKsunrisers hyderbad
Advertisement
Next Article