Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நாதகவின் அரசியல் மக்களை வைத்து பிழைக்க அல்ல, மக்களுக்காக உழைக்க” - சீமான் பேச்சு!

09:56 PM Mar 23, 2024 IST | Web Editor
Advertisement

நாதகவின் அரசியல் மக்களை வைத்து பிழைக்க அல்ல, மக்களுக்காக உழைக்க என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 40 தொகுதியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் சென்னை பல்லாவரம் அருகே அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாதக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்துவைத்தார்.

முன்னதாக, இந்த கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, 

“மக்கள் என் சின்னத்தை தேட மாட்டார்கள். என்னைத்தான் தேடுவார்கள். எதுவுமே இல்லை என்ற நிலையை ஒருவன் உணர்ந்ததால் அவன் உயிரையே ஆயுதமாக ஏந்துவான். அதே நிலையில் தான் இந்த சீமானும் நின்று கொண்டிருக்கிறேன். எங்கள் அரசியல் மக்களை வைத்து பிழைக்க அல்ல, மக்களுக்காக உழைக்க. 

40 வேட்பாளர்களை நான் களத்தில் நிறுத்துகிறேன் என்ற எண்ணம் கூடாது. 40 புரட்சியாளர்களை உங்களுக்கு முன்பு நிறுத்துகிறேன். இது ஜெயிக்குமா இது வெல்லமா என்ற எண்ணத்தை கைவிடுங்கள். உலகில் உள்ள தமிழர்களாடு இணைந்து, தேர்தலை நாம் சந்திக்கிறோம். தமிழ் தேசிய கோட்டையை கட்டி நிமிர்த்தும் 40 வேட்பாளர்களை நிறுத்துகிறேன்.

மாற்று மாற்று என கூறிவிட்டு அதே கட்சியோடு கூட்டணி வைப்பது மாற்று அல்ல . அது ஏமாற்று. பிரதமர் வேட்பாளர் யார் என கேள்வி கேட்கிறார்கள். சின்னத்தை பார்த்து வாக்கு செலுத்தும் முறையை திருத்துங்கள். நல்ல எண்ணத்தை பார்த்து ஒட்டு போடுங்கள். பிரதமர் வேட்பாளர் நான்‌ தான். 

அரை விழுக்காடு கால் விழுக்காடு உள்ளவர்களுக்கு உடனே சின்னம் கிடைக்கிறது. உரிமையை பற்றி பேசினால் என்னை தேச துரோகி என‌ சொல்கிறார்கள். நாட்டில் நோயாளிகள் அதிகம் இருக்கிறார்கள். நோயாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும். அதற்காகவே இத்தனை டாக்டர் வேட்பாளர்கள். ஒரு கட்சி எல்லா கட்சிக்கும் எப்படி எதிர்கட்சியாக இருக்கிறது. கூட்டத்தில் ஒருவன்‌ உன்னை எதிர்த்தால் நீ வளர்கிறாய்‌ என்று‌ பெயர்‌. கூட்டமே உன்னை எதிர்த்தால் நீ வளர்ந்து விட்டாய் என்று‌ பெயர்.

வட மாநிலங்களில் இருந்து வந்த கேரளாவில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி. ஏன் என்றால் வட மாநிலங்களில் அவர் நின்றால் தோற்று போவார். நாதகவை, பாஜகவின் அணி என்று கூறினார்கள். அதற்கு NIA சோதனை நடத்தி இல்லை என்று நிருபித்தார்கள். சின்னத்திற்கு ஒட்டு இல்லை. சீமானுக்கு தான் ஒட்டு. தனியாக நிற்கிறோம் தனித்து நிற்கிறோம். வரும் சட்டமன்ற தேர்தலில் 150 இளைஞர்களை நிறுத்த போகிறேன்”

இவ்வாறு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Tags :
நாதகElection2024Elections With News7TamilElections2024Loksabha Elections 2024News7Tamilnews7TamilUpdatesNTKParliament Election 2024Seeman
Advertisement
Next Article