வியாழன் கிரகத்தில் வாழ முடியுமா? விண்கலம் அனுப்பிய #NASA
வியாழன் கிரகத்தைச் சுற்றிவரும் ‘யுரோப்பா’ நிலவை ஆய்வு செய்வதற்காக நாசா விண்கலத்தை அனுப்பியுள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா நிறுவப்பட்ட தொடக்கம் முதல் இன்று வரை பல சாதனைகளை படைத்துள்ளது. அந்த வகையில், 95 நிலவுகள் சுற்றி வருகின்ற சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளான வியாழன் கிரகத்தின் ஒரு நிலவுக்கு விண்கலம் ஒன்றை நாசா அனுப்பியுள்ளது.
இந்நிலையில், யுரோப்பா(Europa) என்று அழைக்கப்படும் வியாழனின் 4வது நிலவுக்கு விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது. இந்த படலத்திற்கு அடியில் மிகப்பெரிய உப்பு நீர் கடல் காணப்படுவதாகவும் அந்த நீரில் உயிர்கள் வாழ வாய்ப்பு உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், இந்த ஆய்வினை மேற்கொள்ள யுரோப்பா கிளிப்பர் என்ற விண்கலத்தை நாசா அனுப்பியுள்ளது.
இதையும் படியுங்கள் : சென்னை | “அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசம்” – முதலமைச்சர் #MKStalin அறிவிப்பு!
சுமார் 6,000 கிலோ எடை கொண்ட இந்த விண்கலம், புளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் ஹெவி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த விண்கலம் 62 கோடியே 82 லட்சம் கி.மீ. தூரம் பயணித்து 2030ஆம் ஆண்டு யுரோப்பாவின் சுற்றுப் பாதையை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.