Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

Naruto அனிமேட்டர் ஷிகேகி அவாய் காலமானார்!

பிரபல ஜப்பானிய அனிமேட்டரும் இயக்குநருமான ஷிகேகி அவாய் காலமானார்.
08:20 AM Mar 20, 2025 IST | Web Editor
Advertisement

ஜப்பானிய அனிமேஷன் துறையில் புகழ்பெற்றவராக வலம் வந்தவர் ஷிகேகி அவாய். இவர் ஷிகேனோரி அவாய் என்றும் அழைக்கப்பட்டார். இவர் 1980களில் இருந்து அனிமேஷன் துறையில் பிரபலமான நபராக இருந்து வந்தார். இவர் ஒன் பீஸ், நருடோ, டிடெக்டிவ் கோனன், ஃபுட் வார், ஒன் பன்ஜ் மேன் உள்ளிட்ட பல பிரபலமான அனிம்களை இயக்கியுள்ளார்.

Advertisement

குறிப்பாக இவர் இயக்கியவற்றில் ஒன் பீஸ், நருடோ அனிம்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் இதில் மூழ்கி இருந்தனர். இவர் அனிமேஷன் துறையில் சுமார் 200க்கும் அதிகமாக அத்தியாயங்களை இயக்கினார். மேலும், சுமார் 400-500 அத்தியாயங்களின் முக்கிய பங்காற்றினார்.

இந்த நிலையில், பிரபல அனிமேட்டர் ஷிகேகி அவாய் நேற்று காலமானார். அவருக்கு வயது 71. இவரின் இறப்புக்கான காரணம் குறித்த சரியான தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஷிகேகியின் இறப்பு செய்தி அனிமேஷன் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷிகேகியின் நண்பர்கள், சக இயக்குநர்கள் என பலரும் இவரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags :
AnimeAnime DirectorNarutonews7 tamilNews7 Tamil UpdatesOne Piecepassed awayRIP Shigeki AwaiShigeki Awai
Advertisement
Next Article