Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தவெகவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்...!

தவெக தலைவர் விஜய் முன்னிலையில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
05:38 PM Dec 05, 2025 IST | Web Editor
தவெக தலைவர் விஜய் முன்னிலையில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அக்கட்சியில் இணைந்துள்ளார்.
Advertisement

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிகழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இக்கட்சி 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளது.

Advertisement

இதனிடையே சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். அவருக்கு கட்சியின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் எழுத்தாளரும், பேச்சாளருமான நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்துள்ளார். மதிமுக, அதிமுக, உள்ளிட்ட கட்சிகளில்  பொறுப்பு வகித்த நாஞ்சில் சம்பத் சமீப காலமாக அரசியலில் இருந்து விலகியிருந்தார். இந்த நிலையில் இன்று தவெக கட்சி அலுவலகத்தில் விஜயை சந்தித்த அவர் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.  அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
latestNewsMDMKNanjil SampathTNnewstvkvijay
Advertisement
Next Article