Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் தெப்ப உற்சவம் கோலாகலம்! - ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்...!

07:18 AM Feb 11, 2024 IST | Web Editor
Advertisement

108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

Advertisement

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள வானமாமலை பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 90-வது திவ்ய தேசம் ஆகும். 8 சுயம்பு சேத்திரங்களில் முதன்மையானதும் ஆகும். பிரசித்திபெற்ற இந்த கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் தெப்ப திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு தெப்ப உற்சவம் கோலாகலத்துடன் நடைபெற்றது. இதனையொட்டி வானமாமலை பெருமாளுக்கும், ஸ்ரீவரமங்கை தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தீர்த்த, ஜடாரி, பிரசாத விநியோகம் நடந்தது. பின் இரவில் வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கை தாயார் கோயிலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவத்திற்கு புறப்பட்டனர். தொடர்ந்து வானமாமலை பெருமாள், ஸ்ரீவரமங்கை தாயார் விஷேச அலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி 12 முறை வலம் வந்தனர். விழாவை முன்னிட்டு தெப்பம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு
நிகழ்ச்சியாக வானவேடிக்கை இடம்பெற்றது.

Tags :
BakthidevoteesThamiraparaniTheppa UtsavamTirunelveliVanamamalai Thothatrinathan Perumal Temple
Advertisement
Next Article