Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நான் விஷாலும் இல்ல... சிம்புவும் இல்ல...” - சந்தானத்தின் 'இங்க நான்தான் கிங்கு' திரைப்பட டிரைலர் வெளியீடு!

09:21 PM Apr 26, 2024 IST | Web Editor
Advertisement

நடிகர் சந்தானம் நடித்துள்ள 'இங்க நான்தான் கிங்கு' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

Advertisement

நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'வடக்குப்பட்டி ராமசாமி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் 'இங்க நான்தான் கிங்கு' திரைப்படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் பிரியாலயா, மனோபாலா, தம்பி ராமையா, முனிஸ்காந்த், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச் செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புச் செழியன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். அண்மையில், இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றன. சில நாட்களுக்கு முன் திரைப்படத்தின் கேரக்டர் ரிவீலிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தனர்.

இந்நிலையில் 'இங்க நான்தான் கிங்கு' திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.  நீண்ட நாட்கள் கல்யாணம் ஆகாத சந்தானத்துக்கு ஒரு ஜமீன் குடும்பத்து பெண்ணுடன் திருமணம் நடப்பது போல டிரைலர் காட்சிகள் அமைந்துள்ளது. மேலும்,   “நடிகர் சங்கத்தைக் கட்டி முடிச்சிட்டுத்தான் கல்யாணம் பண்ணுவேன்னு அடம்பிடிக்க நான் விஷாலும் இல்ல. எப்பவும் சிங்கிளா சுத்திகிட்டு இருக்கிறதுக்கு சிம்புவும் இல்ல” என டிரைலர் ஆரம்பத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த திரைப்படம் வருகிற மே 10-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Tags :
Bala SaravananInga Nantaan KinguManobalamovieMuniskanthPriyalayaReleasesanthanamThambi RamaiahTrailer
Advertisement
Next Article