Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

‘இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்’ - கர்ண பிரபுவாக வாழ்ந்து மறைந்த ரத்தன் டாடா!

12:56 PM Oct 10, 2024 IST | Web Editor
Advertisement

தொழிலதிபர் ரத்தன் டாடா செய்த தொண்டுகள் அனைத்தும் இன்று அவரது புகழை பாடி வருகிறது.

Advertisement

1937-ம் ஆண்டு நாவல் டாடா – சுனு தம்பதிக்கு மகனாக பிறந்தவர் ரத்தன் டாடா. தனது கல்லூரி மேல்படிப்பை ஹார்டுவேர்டு பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின்னர் ஐபிஎம் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். எனினும் சில ஆண்டுகளில் மீண்டும் இந்தியாவுக்கு திரும்பினார். 1962 இல் தனது குடும்ப நிறுவனமான டாடா குழுமத்தில் ஒரு சாதாரண தொழிலாளியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 1970களில் டாடா குழுமத்தால் தொடங்கப்பட்ட துணை நிறுவனமான நேஷனல் ரேடியோ மற்றும் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் சாதித்தார். 

பின்னர் அடுத்தடுத்து பல பொறுப்புகளில் வகித்த அவர் 1991ம் ஆண்டில் டாடா சன்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையின் கீழ் டாடா இண்டஸ்ட்ரீஸ் பல முக்கிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அவர் 1990 முதல் 2012 வரை டாடா குழுமத்தின் தலைவராக இருந்தார். அவர் தலைவராக இருந்த காலத்தில், குழுமத்தின் வருவாய் கடுமையாக அதிகரித்து, 2011-12ல் $100 பில்லியனை எட்டியது. பின்னர் அவர் அக்டோபர் 2016 முதல் பிப்ரவரி 2017 வரை தற்காலிக தலைவராக ஆனார்.

விருதுகள்

இந்தியாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் விருதுகளான பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன், நற்பணிகளுக்கான கார்னகி பதக்கம், சிங்கப்பூர் அரசு வழங்கிய கௌரவக் குடிமகன் அந்தஸ்து ஆகிய விருதுகளை அவர் பெற்றுள்ளார். இவற்றோடு மனிதநேய மாண்பாளன் என மக்களால் அன்பாக அழைக்கப்பட்டார்.

மக்களால் கொண்டாடப்படுவது ஏன்?

உலக பணக்காரர்களில் பலர் இந்தியாவில் இருந்தாலும், இந்திய வளர்ச்சிக்காக அதிகம் பாடுபட்டவர் என்றால் அது ரத்தன் டாடாதான். ஒவ்வொரு தொழிலாளர்களும் தங்கள் நிறுவனங்களை இன்னும் உயர்த்தவே திட்டமிட்டு வருகின்றனர். ஆனால் தனது நிறுவனத்தின் பாதி வருமானத்தை தொண்டு நிறுவனங்களுக்கு அளித்து வந்தார் ரத்தன் டாடா.

உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனம் என்றால் பட்டம் டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்செட்ஜி டாடாவின் தொண்டு நிறுவனம் தான். ஜாம்செட்ஜி டாடா இந்தியாவிற்கு ஆற்றிய பங்களிப்புகள் வியக்க வைக்கும். மொத்தம் ரூ. 8.29 லட்சம் கோடி நன்கொடையாக தந்துள்ளது ஜாம்செட்ஜி டாடா தொண்டு நிறுவனம். ஜாம்செட்ஜி டாடா மார்ச் 3, 1839 இல் பிறந்தார். இந்திய தொழில்துறையின் தந்தை என்று போற்றப்படும் இவரது பெயரில் தான், இந்தியாவின் புகழ் பெற்ற தொழில் நகரமான ஜாம்ஷெட்பூர் இருக்கிறது.

2021 EdelGive Hurun வெளியிட்ட அறிக்கையின்படி, ஜாம்செட்ஜி டாடாவின் தொண்டு நன்கொடைகள் முகேஷ் அம்பானி, கெளதம் அதானி, அசிம் பிரேம்ஜி மற்றும் ஷிவ் நாடார் போன்றவர்களின் சொத்துக்கள் மற்றும் அவர்கள் வழங்கிய நன்கொடைகளை விட அதிகம். மருத்துவம் மற்றும் கல்வியின் மீது அதிக கவனம் செலுத்திய டாடா, ஏராளமான கல்வி நிறுவனங்களை உருவாக்கினார். அவர் செய்த தொண்டுகள் அனைத்தும் இன்று அவரது புகழ் பாடி வருகிறது.

Tags :
industrialistRatan Naval TataRatan Tata
Advertisement
Next Article