Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நாமக்கல் தொகுதியின் கொமதேக வேட்பாளர் அறிவிப்பு!

07:40 PM Mar 18, 2024 IST | Web Editor
Advertisement

திமுக தலைமையிலான கூட்டணியில் மக்களவை தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை கொமதேக அறிவித்துள்ளது. 

Advertisement

மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் வேட்புமனுத்தாக்கல் தொடங்குகிறது.  இதனால் கூட்டணி,  தொகுதி பங்கீட்டை நிறைவு செய்ய அரசியல் கட்சிகள் தீவிரமாக பணிபுரிந்து வருகின்றன.

அந்த வகையில் தமிழ்நாட்டில் திமுக படுவேகமாக உள்ளது. ஏற்கனவே கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை உறுதி செய்துவிட்ட நிலையில், அதனைத்தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி மற்றும் திமுக சார்பில் போட்டியிடும் தொகுதிகளையும் இறுதி செய்து அதன் அறிவிப்பையும் வெளியிட்டது.

தமிழ்நாட்டில் 21 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. விசிகவுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரத்தை திமுக கட்சி ஒதுக்கியுள்ளது. இதேபோல் சிபிஐக்கு 2 தொகுதிகளும், சிபிஎம் கட்சிக்கு 2 தொகுதிகளும், மதிமுகவிற்கு ஒரு தொகுதியும், இயூமுலீக்-கிற்கு ராமநாதபுரம் தொகுதியையும், கொமதேக-வுக்கு நாமக்கல் தொகுதியையும் ஒதுக்கியது.

இந்நிலையில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அக்கட்சி அறிவித்துள்ளது. இதன்படி, நாமக்கல் தொகுதியில் சூரியமூர்த்தி போட்டியிடவுள்ளதாக கொமதேக அறிவித்துள்ளது. 10 ஆண்டுகள் கொமதேக தலைமை நிலைய செயலாளராகவும், 7 ஆண்டுகள் மாநில இளைஞரணி செயலாளராகவும் இருந்தவர் சூரியமூர்த்தி  என்பது குறிப்பிடதக்கது.

Tags :
candidateDMKElection2024KMDKnamakkalParlimentary Election
Advertisement
Next Article