பில்கேட்ஸே சந்தித்த நாக்பூர் டோலி சாய்வாலா.. புர்ஜ் கலீஃபாவின் உச்சியில் செய்த செயல் இணையத்தில் வைரல்!
பில்கேட்ஸே சந்தித்த நாக்பூர் சாய்வாலாவான டோலி சாய்வாலா புர்ஜ் கலீஃபாவின் உச்சியில் செய்த செயல் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸை அறியாதவர்கள் இவ்வுலகில் இருக்க மாட்டார்கள். அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார், இது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் 'ஒன் சாய்.. ப்ளீஸ்' என்று சொல்வார். அதன் பிறகு, அந்த வீடியோவில் இடம்பெற்ற காட்சியை பார்த்த அனைவரும் ஆச்சரியமடைந்தனர். பில் கேட்ஸ் நாக்பூரில் உள்ள டோலி சாய்வாலாவால் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்துவதைக் ஒரு வீடியோவாக பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவைப் பகிர்ந்த பில் கேட்ஸ், 'இந்தியாவில் ஒரு எளிய தேநீர் தயாரிப்பதில் கூட புதுமைகளைக் காணலாம்' என்று தலைப்பிட்டு எழுதியுள்ளார்.
டோலி நாக்பூரைச் சார்ந்தவர். அவர் அங்கே பல வருடங்களாக டீக்கடை நடத்தி வருகிறார். அவர் தனது தனித்துவமான வழியில் தேநீர் தயாரிக்கும் சில வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அது மிகவும் வைரலானது. அதன் பிறகு டோலி சாய்வாலா என்ற பெயரில் பிரபலமானார்.
ஆனால் இவ்வளவு பிரபலமான பிறகும், ஒரு நாள் பில் கேட்ஸிடம் இருந்து தனக்கு அழைப்பு வரும் என்றும், அவருக்கு டீ போட வாய்ப்பு கிடைக்கும் என்றும் டோலி சாய்வாலா நினைத்திருக்க மாட்டார். பில்கேட்ஸ் டோலி சாய்வாலாவை சந்தித்த பிறகு வெளியான வீடியோ இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் ஹிட் அடித்தது.
இந்த நிலையில் டோலி சாய்வாலா துபாயில் உள்ள மிகவும் பிரபலமான கட்டடமான “புர்ஜ் கலீஃபாவில்” இருப்பது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் துபாயின் புர்ஜ் கலீஃபாவின் உயர்ந்த கட்டடங்களில் இருந்து துபாயை பார்வையிடுவது போலவும், அங்கே அமர்ந்து காஃபி அருந்துவது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த டோலி சாய்வாலா “ ஒரு காபி சாப்பிட புர்ஜ் கலீஃபாவின் உச்சிக்கு சென்றேன்” என பதிவிட்டுள்ளார்.