நாகூர் தர்காவின் கந்தூரி விழா... அமைச்சர் செஞ்சி மஸ்தான், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பங்கேற்பு...
நாகூர் தர்காவின் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
நாகூர் ஆண்டவர் என போற்றப்படும் செய்யது சாகுல் ஹமீது பாதுஷாவின் நினைவு தினம்
ஒவ்வொரு ஆண்டும் உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் கந்தூரி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து 467-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த டிசம்பர் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தாபூத் எனும் சந்தனக்கூடு ஊர்வலம் நேற்று (டிச.23) இரவு நாகப்பட்டினத்தில் இருந்து துவங்கியது. சாம்பிராணிசட்டி ரதம், நகராமேடை மற்றும் 10-க்கும் மேற்பட்ட மின் அலங்கார தட்டிகள் சந்தன கூட்டின் முன்னும், பின்னுமாக
அணிவகுத்து நாகை மற்றும் நாகூர் நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக வலம் வந்தது. பின்னர் இன்று (டிச.24) அதிகாலை 5 மணி அளவில் தர்கா அலங்கார வாசலில் நிறைவடைந்தது.
இதையும் படியுங்கள்: “இயக்குனர் கே.பாலசந்தருக்கு சிலை வைக்கப்படுவது குறித்து விரைவில் நல்ல செய்தி வரும்!” – பூச்சி எஸ்.முருகன் தகவல்!
இதனைத் தொடர்ந்து சந்தனக்கூட்டில் இருந்து தர்கா பரம்பரைக் கலிபா மற்றும்
ஆதினங்கள் ஆகியோர் மூலம் சந்தனக்குடம் தர்காவுக்குள் எடுத்து செல்லப்பட்டது.
பின்னர் நாகூர் ஆண்டவர் சமாதிக்கு பாரம்பரிய முறைப்படி சடங்குகளுடன் சந்தனம்
பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. சந்தனம் பூசி மயக்கமடைந்து தூக்கிவரப்பட்ட
தர்காவின் கலிபாவை இஸ்லாமியர்கள் பக்தி பரவசத்துடன் தொட்டு வணங்கினர்.
கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்வினை காண
சிறுபான்மையினர் நல துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், இசையமைப்பாளர்
ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் பங்கேற்றனர். மேலும், தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்களும் நாகூரில் குவிந்தனர். நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.