Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மியான்மரில் சீர்குலைந்து வரும் பொருளாதாரம் - நடப்பு நிதியாண்டில் 1% வளர்ச்சியே இருக்கும் என உலக வங்கி கணிப்பு

08:35 AM Dec 13, 2023 IST | Jeni
Advertisement

நடப்பு நிதியாண்டில் மியான்மரின் பொருளாதார வளர்ச்சி வெறும் 1% மட்டுமே இருக்கும் என்று உலக வங்கி கணித்துள்ளது.

Advertisement

மியான்மரில் அந்நாட்டு ராணுவத்துக்கும், அதன் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக நாட்டின் அமைதி சீர்குலைந்துள்ளது. மேலும், 25 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களின் வாழ்விடத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் மியான்மர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வெறும் 1% மட்டுமே இருக்கும் என உலக வங்கி கணித்துள்ளது. இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், மியான்மர் எல்லைப் பகுதிகளில் அதிகரித்துள்ள மோதல்களால் சீனாவின் வர்த்தக வழிகள் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ம.பி., சத்தீஸ்கரில் புதிய முதலமைச்சர்கள் இன்று பதவியேற்பு..!

இதனால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், மியான்மரின் பணவீக்கம் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதுவரை 25 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களின் இருப்பிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ள உலக வங்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் ஒரு சதவிகிதம் மட்டுமே இருக்கும் என கணித்துள்ளது.

Tags :
CrisiseconomyfallMyanmarReportsWorldBank
Advertisement
Next Article