"மை வி3 ஆட்ஸ்" செயலி முடக்கம்!
07:20 AM Feb 11, 2024 IST
|
Web Editor
அப்போது காவல் ஆணையர் மீட்டிங்கில் இருப்பதால் புகாரை எழுதி வாங்கி
கொண்டு சக காவலர்கள் அவர்களை அடுத்த வாரம் வருமாறு கூறினர். ஆனால், காவல் ஆணையரை சந்தித்து விட்டு தான் செல்வோம் என்று சக்தி ஆனந்த் மற்றும் ஆதரவாளர்கள் காவல் ஆணையர் வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி கேட்காததால் கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமணம் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைத்தொடர்ந்து மை வி3 ஆட்ஸ் செயலியும் முடக்கப்பட்டுள்ளது.
Advertisement
மை வி3 ஆட்ஸ் நிறுவனத்தின் மீது அவதூறு பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்க வந்த உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், "மை வி3 ஆட்ஸ்" செயலி முடக்கப்பட்டுள்ளது.
Advertisement
கோவை வெள்ள கிணறு பகுதியில் மை வி3 ஆட்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மை வி3 ஆட்ஸ் நிறுவனம் போலியாக மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகப் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை மை வி3 ஆட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்த் மற்றும் 180-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
கொண்டு சக காவலர்கள் அவர்களை அடுத்த வாரம் வருமாறு கூறினர். ஆனால், காவல் ஆணையரை சந்தித்து விட்டு தான் செல்வோம் என்று சக்தி ஆனந்த் மற்றும் ஆதரவாளர்கள் காவல் ஆணையர் வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர்.
Next Article