Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"என் துணையே... வழித்துணையே நீயே..." - வெளியானது #Dragon படத்தின் 2வது பாடல்!

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' படத்தின் 2வது பாடல் வெளியாகியுள்ளது. 
09:11 PM Jan 13, 2025 IST | Web Editor
Advertisement

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' படத்தின் 2வது பாடல் வெளியாகியுள்ளது. 

Advertisement

‘கோமாளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிப்பி வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன்‘லவ் டுடே’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இதையும் படியுங்கள் : #Earthquake | ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

‘லவ் டுடே’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது.லவ் டுடே’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் தமிழ் திரையுலகில் முக்கியமான நபராக உருவெடுத்தார். தற்போது, ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வருகிறார். இத்திரைப்படத்திற்கு ‘டிராகன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் கயடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான 'ரைஸ் ஆப் தி டிராகன்' வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் 2-வது பாடலான 'வழித்துணையே' பாடல் வெளியாகியுள்ளது. இப்படம் காதலர் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Next Article