மழை வேண்டி தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்!
12:25 PM May 04, 2024 IST
|
Web Editor
இந்நிலையில் இந்த வெப்பம் தணியவும், மழை பொழியவும் இஸ்லாமியர்கள் கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று கரூர், சிங்காரதோப்பு பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறப்பு கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு கூட்டுத் தொழுகையில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் திருவாரூர் மாவட்டம் கூத்தநல்லூரில் உள்ள தவ்ஹீத் ஜமாத் சார்பிலும் 200க்கும் மேற்பட்டோர் தொழுகையில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு தொழுகைக்கு பின் கூத்தாநல்லூர் காவல் துறையினர் சார்பில் தொழுகையில் பங்கேற்ற அனைவருக்கும் மழை பொழிவை அதிகரிக்கும் நோக்கோடு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
Advertisement
மழை வேண்டி தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கரூர் மற்றும் சிங்காரதோப்பு பகுதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்பு கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டனர்.
Advertisement
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுவாக கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும். ஆனால், இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனையடுத்து கோடை தொடங்கியதிலிருந்து நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்ப அலை வீசுவதாலும், போதிய மழை இல்லாததாலும் பொதுமக்கள் மிகவும் சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
Next Article